06 மே 2010

ரயில் கவிதைகள்

01

வழித்து உட்கார ஏலாமல்
வழியில் நின்ற ரயிலை
வசைபாடியபடி
நின்று கொண்டிருக்கிறாள்
வயக்காட்டு ஓரம்.

O

02

குடும்பத்தை
ஏற்றிச் சென்றது ரயில்.
கூடவே வருமிந்த
தனிமையை என்ன செய்ய?

O

03

வந்து போகும் ரயில்களையெல்லாம்
வழிமேல் விழி வைத்து
பார்த்துக் கொண்டிருக்கின்றன
பிளாட்பார இருக்கைகள்
இன்னொருமுறை வந்தமர்ந்து
நிகழக்கூடிய
பிரிவுப் பேச்சுக்களின்
பிற்பாதியைக் கேட்க.

O

04

ஒரு ரயில் சிநேகத்தைப்
போலாவது
இருந்திருக்கலாம்
நமதந்த
இறுதிப் பிரிவு.

O

05

நின்ற ரயில்களே
நெடு நாட்கள்
நினைவோடு.

O

06

வந்து விட்டது
ரயில்களிலும்
வசதியானவர்க்கு
மட்டுமே என்றும்.

O

07

இன்னமும் பிரிவதற்கு
ரயில் நிலையங்களே
ஏதுவாய்.

0
(நன்றி: காட்சி இணைய தளம்)

11 கருத்துகள்:

  1. குடும்பத்தை
    ஏற்றிச் சென்றது ரயில்.
    கூடவே வருமிந்த
    தனிமையை என்ன செய்ய?

    **
    வந்து போகும் ரயில்களையெல்லாம்
    வழிமேல் விழி வைத்து
    பார்த்துக் கொண்டிருக்கின்றன
    பிளாட்பார இருக்கைகள்
    இன்னொருமுறை வந்தமர்ந்து
    நிகழக்கூடிய
    பிரிவுப் பேச்சுக்களின்
    பிற்பாதியைக் கேட்க.

    O
    ஒரு ரயில் சிநேகத்தைப்
    போலாவது
    இருந்திருக்கலாம்
    நமதந்த
    இறுதிப் பிரிவு.

    **

    இன்னமும் பிரிவதற்கு
    ரயில் நிலையங்களே
    ஏதுவாய்.

    **

    அபாரம் செ.ஜெ!

    பதிலளிநீக்கு
  2. //ஒரு ரயில் சிநேகத்தைப்
    போலாவது
    இருந்திருக்கலாம்
    நமதந்த
    இறுதிப் பிரிவு.//

    மிக அருமை.

    பதிலளிநீக்கு
  3. கவிதைகள் நல்லாயிருக்கு. ரயில் பெட்டிகள் மாதிரி, ஒவ்வொன்னா கடந்துபோகையில், ஒவ்வொரு அனுபவம்.

    பதிலளிநீக்கு
  4. ஒரு முறையாவது ரயில் நிலையக்காட்சி இருந்தால்தால், படம் வெற்றிபெறும் என்ற நம்பிக்கையில் இன்னமும் ரயில்கள் படம் பிடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  5. யதார்த்தமான கவிதைகள், வரிகளும்.... முதல் கவிதையிலிருந்து மீளமுடியாமல் தவிக்கிறேன்... அருமை...அருமை....

    பதிலளிநீக்கு
  6. வரிகள் மனதில் நிற்கின்றன

    பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  7. நன்றி வேலு வருகைக்கும் வாழ்த்துக்கும்.

    பதிலளிநீக்கு