30 ஜூன் 2010

சங்கத்தமிழ் அத்தனையும் தா

சங்கத்தமிழ் அத்தனையும் தாவென்று
சத்தியமாய் கேட்கவில்லை நண்பர்களே.

பாலும் தெளிதேனும் தந்து நம்
பைந்தமிழ் பாட்டி கேட்ட
தங்கத்தமிழில் நிகழ்த்துவோம்
தவறாமல் நம் பேச்சுக்களை.

குழலினிமை யாழினிமை
கொண்ட நம் குருத்துக்கள்
மூத்த குடி தமிழ்ப் பாட்டும்
முறையாகப் பாடச் செய்வோம்.

வெறும் வாயை மெல்வதற்கும்
வேறு மொழி வேண்டாமினி.

எப்போதும் தன் மொழியில்
எவ்வினமும் உரையாட
நாட்கடந்த சந்திப்பிலும்
நாம் மட்டும் இன்றுவரை
நளினமாக ஆங்கிலத்தில்.

அடுத்தெந்த மொழியையுமே
அறிந்து கொள்ளல் நலமே
ஆங்காங்கே பொருளீட்ட
அடுத்தவருடன் தொடர்பு கொள்ள
அகம் மகிழ்தல் என்றுமே நம்
அன்னைத் தமிழ்ப் பேச்சிலல்லவா?

சங்கத்தமிழ் அத்தனையும் தாவென்று
சத்தியமாய் கேட்கவில்லை நண்பர்களே.

0

3 கருத்துகள்:

  1. வருகைக்கு நன்றி ஆறுமுகம் முருகேசன்.

    பதிலளிநீக்கு
  2. அருமை செ. ஜெ. உள்ளத்தில் கிடந்ததை அப்படியே சொல்லிவிட்டிர்கள். கவிதைக்கு நன்றி

    பதிலளிநீக்கு