29 நவம்பர் 2010

உயிரோசை கவிதைகள்

29-11-2010 தேதியிட்ட உயிரோசை மின்னிதழில் வெளியான கவிதைகள்.

செல்வராஜ் ஜெகதீசன் கவிதைகள்வரும் வரை
வரிசையாய் வந்து
விசாரிக்கும்
உன் அலைபேசி விசாரிப்புகளோடு
வந்தபின் விழிகளால்
நீ எதிர்கொள்ளும் உன்
வினாக்களுக்காகவே
வந்து கொண்டிருக்கிறேன்
உன்னை நோக்கி.

O
என்றேனும் நிகழும்
நீ திரும்பும் கணமென்னும்
எதிர்பார்ப்பை
எப்போதும்
பொய்யாக்கிப் போகும்
உன் முகம் திரும்பா
பிரிதல்கள்.


O
வாழ்க்கை
சில நேரங்களில்
இப்படி இருக்கிறது.
இப்படியான
சில நேரங்களிலேயே
இருந்து விடுமோ
இந்த வாழ்க்கை?

O
வீழ்த்தி விட்டோம்
வேறோர் அணியை என்று
வீறு கொள்கிறோம்
விளையாட்டில்.

இன்னொரு மனதை
வெற்றி கொள்வதை
விழுந்து விட்டோமென்கிறோம்
காதலில்.

O

6 கருத்துகள்:

 1. அனைத்தும் நன்று.

  நான்கும் ஐந்தும் மிக அருமை.

  வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 2. ஐந்தும் பிடித்திருகிறது . ஐந்தில் ஒரு சிறுகதை தோன்றுகிறது ..

  பதிலளிநீக்கு
 3. அனைத்தும் அருமை நண்பரே.

  வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு