வண்ணதாசன் அவர்களுக்கு வாழ்த்துக்களோடு, அவரது ஒரு கவிதை.

அம்மா
அம்மாவுக்கு அம்மா
அம்மாவுக்கு அம்மாவுக்கு அம்மா
குனிந்து குனிந்து போட்ட
அதே கோலம்தான்.
போடுகிற முற்றம் மட்டும்
பொழுதுக்குத் தக்க மாறுகிறது.
வாடகைக்கு இருந்தாலும்
வாசல் நம்முடையதுதான்.
மனதுக்கு ஏற்றபடி
மாக்கோலம் சுருங்கும்.
வந்து விட்டது கோலப் பொடியிலும்
கலப்படம்.
பெருக்கித் தள்ளும்
வாரியல் நுனியில்
நேற்றைய கோலம் மினுக்க -
விரல்களில் மிச்சமிருக்கிறது
இன்னும் கொஞ்சம்
விழுதுகள்.
# கல்யாண்ஜி
பகிர்வுக்கு நன்றி. வண்ணதாசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குமகிழ்வும் நன்றியும்
பதிலளிநீக்குநன்றி ராமலக்ஷ்மி & Vel Kannan.
பதிலளிநீக்கு