24 அக்டோபர் 2011

ஆசை முகம்சுழல் வட்ட மேஜை
சுருங்கிய மஞ்சள் ஒளி
சுவைத்த உணவின்
நறுமணச் சுவை.
இவ்வளவு நீண்ட
வருடங்களின்
இடைவெளிக்குப் பின்னும்
சன்னமாக நினைவில்.

சூரிய ஒளியின் இந்த
நிச்சலனப் பொழுதில்
எள்ளளவும்
எதிர்வராமல்
உன் முகம்.

உண்மையில் இருந்ததா
உனக்கு
அசலாய் ஒரு முகம்
அன்றைக்கு?

o

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக