21 ஏப்ரல் 2010

பின்னிரவு முகம்

அதிகாலை
விமானமொன்றில்
அடியேனை
வழியனுப்ப
வந்த நண்பன்

நீள் இரவை
கழிப்பதற்கென்று
திரைப்பட அரங்கொன்றில்
காத்திருந்த வேளையில்
கைபேசியில்
மனைவியிடம்
மறுபடி மறுபடி
கேட்டுக் கொண்டிருந்தான்

மகனின் தற்போதைய
ஜுரம் பற்றியும்
மருந்து கொடுத்தாயிற்றா
என்பதைப் பற்றியும்.

வழியனுப்பி
விடைபெற்றுப் போன
நண்பனின் அந்தப்
பின்னிரவு முகம்
இன்றுவரை
பின்னலிட்ட சித்திரமாய்
என்னுள்.

o

4 கருத்துகள்:

  1. இப்படியான மனிதர்கள் நண்பர்களா கிடைத்ததே தவம் என்று நினைக்கிறன்
    மெல்லிய தவித்தலை கவிதையாக வெளிப்படுத்திய உங்களின் கவி திறமைக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு