26 ஏப்ரல் 2010

கவிதைகள்

01

நின்று சலித்த
நீள் பயணமொன்றில்
மென்று விழுங்கிய
பார்வையோடு நீ
விட்டுச் சென்ற
இருக்கையில்
இன்னமும்
உன் சூடு.

0

02

பிறை நிலா
நெற்றிப் பெண்ணின்
பின் முதுகில்
பௌர்ணமி நிலா.

0

03

தளும்புவதில்லை
நீர் நிறைந்த குடங்களுடன்
நீரற்ற குடங்களும்.

0

(உயிரோசை மின்னிதழ் 26-4-2010-ல் வெளியானது)

2 கருத்துகள்:

  1. 1.
    அடடா...
    2.
    ஐ...
    3.
    அட .. ஆமா ...

    உயிரோசையில் வந்தமைக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  2. நன்றி வேல் கண்ணன்.
    உங்கள் கவிதை உயிரோசையில் வந்தமைக்கு என் வாழ்த்துக்களும்.

    பதிலளிநீக்கு