14 ஏப்ரல் 2010

முன் முடிவுகளற்று இருப்பது

எப்போதாவது
என்றால் சரி.

எங்காவது ஒருமுறை
என்றால் சரி.

யாராவது ஒருமுறை
எனில் சரி

நடைபெற்ற யாவற்றிலும்
நாம் இருவருமே
பங்கு பெற்றிருக்க

பிரச்சினை என்றவுடன்
பின்வாங்கி நிற்கும்
உங்களிடம் பெரிதாய்
வருத்தமேதுமில்லை எனக்கு.

எதையுமே அறியாத
தோற்றம் தரும்
உங்களின் முகம் குறித்தும்
எனக்கு முழு சம்மதமே.

எல்லாப் பிரச்சனைக்கும்
என்னை நோக்கி நீளும்
உங்கள் கைகளைப் பற்றிக்
குலுக்க இப்பொழுதும்
எனக்கு சம்மதம்.

ஆயினும் ஒரு முடிவுக்கு
வந்தாக வேண்டும்
நான் இப்போது.

முடிவொன்று தேவையா
என்றாவது
முடிவு செய்ய வேண்டும்.

முன் செய்த முடிவுகளெல்லாம்
முடிவில் இப்படி எப்படியோ
ஆகிக்கொண்டிருக்க

முன் முடிவுகளற்று இருப்பதைப் பற்றி
முழு மூச்சாய் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

o

10 கருத்துகள்:

  1. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    பதிலளிநீக்கு
  2. அருமை. நம் மனசாட்சியுடன் நடக்கும் போர் முடிவில்லாதது.

    பதிலளிநீக்கு
  3. நன்றி குலவுசனப்பிரியன்.

    பதிலளிநீக்கு