எப்போதும் நம் வசமே
கொடுக்கப்பட்டிருக்கிறது
ஏதொன்றையும்
தேர்ந்து கொள்ளும்
உரிமை
வயோதிக வயதில்
வாய்க்குமொரு
உத்தியோக உயர்வோ
கடும் முதுகு வலியோடான
கார் பயணமொன்றோ
முழுதும் படபடப்புடன்
மேற்கொள்ள நேரும்
ஒரு சுற்றுலாவோ
அமைதியற்ற மனதுடன்
கூடிய
ஷாப்பிங் நாளொன்றோ
சிற்சில
பிழைகளோடான
சீரிய கவலையேதுமற்ற
ஒரு வாழ்வோ
சின்னச் சின்ன
சண்டைகளுடனோ
விழுந்தெழுந்த சில
காதல் நினைவுகளுடனோ
தேர்வதில் நிகழும்
அத்தனை
சாதக பாதகங்களுடன்
ஏதொன்றையும்
தேர்ந்து கொள்ளும்
உரிமை
எப்போதும் நம் வசமே
கொடுக்கப்பட்டிருக்கிறது.
o
திண்ணையில் வாசித்தேன்.
பதிலளிநீக்குமிக அருமையான கவிதை.
நன்றி ராமலக்ஷ்மி.
பதிலளிநீக்குநல்லாருக்கு செ.ஜெ.
பதிலளிநீக்குநன்றி பா.ரா.
பதிலளிநீக்குஏதேனும் ஒன்றை கூட விலகி பார்க்க தோன்றவில்லை நண்பரே
பதிலளிநீக்குவேறன்ன சொல்வது ... எப்பொழுதும் போல் மிக மிக அருமை
வழக்கம்போல, நானும், வேறென்ன சொல்ல வேல்கண்ணன்.
பதிலளிநீக்குமிக்க மகிழ்ச்சியும் நன்றியும்.