10 மே 2010

உயிரோசை கவிதைகள்

01
கடைசியில்

கண்ணைப் பார்
சிரி.

கைகளை வீசி
விடை கொடு.

கால்களை அழுந்த
நிலத்தில் வை.

கடைசியில்
அதுதான்.

0

02
பணிவு

இத்தனைப் பணிவான
உங்கள் எதிர்வினையால்
இயல்பாக நீளும்
இந்தக் கைகளைப் பற்றி
இரண்டொரு முறை
யோசிக்கச் செய்கிறீர்கள்.

0

(நன்றி: உயிரோசை)

5 கருத்துகள்: