24 மே 2010

இன்னும் கூட

திடீரென்றுத்
தோன்றிய ஒரு நினைப்பில்
பல்வேறு மனிதர்களுக்கு
பணப்பட்டுவாடாவில்
இறங்கினேன்.
வாரந்தோறும்
வீட்டைக் கழுவிச் சுத்தம் செய்ய
வந்துபோகும் முதியவருக்கு
சற்றுக் கூடுதலாய் பணம்
சேர்த்துத் தந்தேன்.
கரிக்கோடுகளின்
எண்ணிக்கையை
கணக்குப் பார்க்காமல்
பால்காரரின்
பணத்தையும்.
மளிகைக்கடைக்காரர் முதல்
மழையில் நனைந்தபடி
தினசரி போடும் பையன் வரை
முன்கூட்டியே கிடைத்த
பணம் குறித்து
முழுத் திருப்தி.
இடையில்
இப்படி உலுக்கி
எழுப்பப்படாமல்
இருந்திருந்தால்
இன்னும் கூடக்
கொடுத்திருக்கலாம்
இருந்த பணத்தை
இன்ன பிறர்க்கும்
இஷ்டம்போல.

o

6 கருத்துகள்:

  1. நல்லாருக்குங்க கவிதை...ஆழ்மனசின் ஏக்கம்தான் கனவு... மனசு மட்டுமே இருந்து என்ன பண்றது.....

    பதிலளிநீக்கு
  2. ந‌ல்ல‌ க‌விதை. வாழ்த்துக‌ள்

    பதிலளிநீக்கு
  3. //..இருந்த பணத்தை
    இன்ன பிறர்க்கும்
    இஷ்டம்போல.//

    இந்த வரிகளில் நிசமாகவே உலுக்கி விட்டது போல் இருக்கிறது செ.ஜெ

    பதிலளிநீக்கு