03 ஆகஸ்ட் 2010

எல்லோர்க்கும் பெய்யும் மழை

எல்லோர்க்கும் பொதுவான
இறையை
இருபது ரூபாய் கொடுத்து
சிறப்பு தரிசனத்தில்
சந்தித்து வந்தோம்
ஓரிடத்தில்.

நான்கு மணிநேரம்
நீண்ட வரிசையில்
காத்திருந்தும்
நான்கு மணித்துளிகளே
பார்க்கும்படி
நெட்டித் தள்ளப்பட்டோம்
வேறோரிடத்தில்.

இரண்டு இடத்திலும்
எல்லோர்க்கும் பொதுவாய்
பெய்து கொண்டிருந்தது
மழை.

0

14 கருத்துகள்:

 1. சும்மாவேனும் கோயிலுக்கு போவதை தவிர்ப்பது மேல் சொன்ன இரண்டு காரணங்களும் உண்டு. இறுதி நான்கு வரி வேறு ஒரு தளத்திற்கு கொண்டு செல்கிறது. கவிதைக்கு மிக்க நன்றி செ. ஜெ

  பதிலளிநீக்கு
 2. //எல்லோர்க்கும் பொதுவாய்
  பெய்து கொண்டிருந்தது
  மழை.//

  இதுதான் நிதர்சனம்... பாராட்டுக்கள் ,

  பதிலளிநீக்கு
 3. சிறிது நனைந்து விட்டு வந்திருக்கலாம் செல்வராஜ்

  பதிலளிநீக்கு