13 ஜூன் 2010

நண்பர்கள் வட்டம்

இடைவிடாது பேசிக்கொண்டிருந்த
நண்பனை இடைமறித்து
இன்னொரு நண்பன்
இதுவரைக்கும் உனக்கு
எத்தனை நண்பர்கள் என்றான்.
அருகிருந்த
என்னையும் சேர்த்து
நாலைந்து என்ற நண்பன்
அதிகமாய் யாரிடமும்
தான் அவ்வளவாய்
வைத்துக்கொள்வதில்லை
என்றான்.
எதிராளியை பேசவிடாது
இப்படி இடைவிடாது
பேசிக்கொண்டிருப்பதே
நண்பர்கள் வட்டம்
நாலைந்தோடு
நிற்கக் காரணம்
என்றான் மற்றவன்.

இப்போதெல்லாம்
நண்பனின்
இடைவிடாத பேச்சுக்களில்
இடையிடையே
கேட்கப்படுகிறது
'நான் அதிகம் பேசுகிறேனா?'
என்பதும்.

o
(நன்றி: திண்ணை.காம்)

5 கருத்துகள்: