17 ஜூன் 2010

பிறிதொரு அம்பு

எதேச்சையான என்
அந்த வரவு
நிச்சயம் நீங்கள்
எதிர்பாராத ஒன்றாகவே
இருந்திருக்கும்

அழைப்பொன்றை
தந்துவிட்டு
வந்திருக்கலாம் நான்.

கைபேசியாவது ஒலித்து
சொல்லி இருக்கலாம்
என் வரவை

எவ்விதத்திலும் உங்கள்
இயல்பு நிலை மாறாமல்

யாதொரு கவலையுமின்றி
இருக்கலாம் நீங்கள்

பயன்படுத்தும் கட்டாயம்
வரும் வரை
பத்திரமாகவே இருக்கும்
சொல்லப்படாத ரகசியங்களை
சொருகி வைத்திருக்கும்
அறையில்
இன்னொரு அம்பாக
இதுவும்.

o

6 கருத்துகள்:

  1. எவ்விதத்திலும் உங்கள்
    இயல்பு நிலை மாறாமல் //

    உங்களது இன்னொரு இயல்புநிலை கவிதை. :)

    பதிலளிநீக்கு
  2. பயன்படுத்தும் கட்டாயம்
    வரும் வரை
    பத்திரமாகவே இருக்கும்
    சொல்லப்படாத ரகசியங்களை//
    படித்தவுடன் வாழ்வின் ரகசியங்களற்ற தேடுகிறேன். அருமையான கவிதை நண்பரே

    பதிலளிநீக்கு
  3. //பயன்படுத்தும் கட்டாயம்
    வரும் வரை
    பத்திரமாகவே இருக்கும்
    சொல்லப்படாத ரகசியங்களை//
    படித்தவுடன் வாழ்வின் ரகசியங்களற்ற பொழுதுகளை தேடுகிறேன். அருமையான கவிதை நண்பரே

    பதிலளிநீக்கு
  4. நன்றி ஆறுமுகம் முருகேசன், வேல் கண்ணன் & உயிரோடை.

    பதிலளிநீக்கு