14 ஜூன் 2010

பூனைக் கவிதைகள்

01

கடைசியாய்
காரொன்றில்
அடிபட்டு இறக்குமுன்
அந்தக் கறுப்புப் பூனை
முழித்தது யார்
முகத்திலோ?

o

02

திருடனொருவனை
காட்டிக்கொடுத்த
அடுத்த வீட்டுத்
திருட்டுப் பூனைக்கு
அதற்குப் பிறகும்
அதே பெயர்தான்.

O

03

இருந்தும்
கடந்தும்
போயின
எத்தனையோ.
இன்னும் பல
எங்கோ
எப்படியோ
இருந்து
கடக்க.

O
(நன்றி: நவீன விருட்சம்)

11 கருத்துகள்:

  1. மூணுமே மிக அருமையா இருக்கு
    ரெண்டாவது மிகப் பிடித்திருக்கிறது.
    :)

    பதிலளிநீக்கு
  2. மூன்றும் நல்லா இருக்கு. வாழ்த்துக‌ளும் கூட‌

    பதிலளிநீக்கு
  3. நன்றி ஆறுமுகம் முருகேசன் & உயிரோடை.

    பதிலளிநீக்கு
  4. மூன்றுமே அருமை.
    முதலில் : தாவியது
    இராண்டாவதில் : தயங்கியது
    மூன்றாவதை கடக்க முடியாத மனது

    பதிலளிநீக்கு
  5. 2 1 3 என் ஆதர்ச வரிசை... வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு