பெருமழைக்
காலமொன்றிலோ
கடுங்கோடையொன்றின்
வெம்மையிலோ
வாடைப்
பருவத்திலோ
வசந்தத்தின்
வாசலொன்றிலோ
அடர் வனாந்திரத்தின்
ஆளரவமற்ற பொழுதுகளிலும்
உயிர் துள்ளும்
உன்னத நேரங்களிலுமென
வாழ்வின்
வெவ்வேறு நிலைகளில்
உங்கள்
வெண்கலக் குரல்
கொடுக்கும் இதம்
உன்னதமானது.
இயல்பான நடிப்புக்கு
இலக்கணமாய்
பேட்டியொன்றில்
நீங்கள் மொழிந்த
நடிகனின் முகம்
வெண்கலப் பானையில்
உருளும் கல்லொன்றாய்
இடையிடையே நெருடும்
இந்தப் பொழுதிலும்.
o
(பாடகர் பி பி ஸ்ரீனிவாஸ் அவர்களுக்கு - இயல்பான நடிப்பு நடிகர் ஜெமினியுடையதே என்ற அவரின் பேட்டிக்காக)
:)
பதிலளிநீக்குகவிதையும் நினைவும் நல்லா இருக்கு
பதிலளிநீக்குநன்றி Sangkavi & உயிரோடை.
பதிலளிநீக்குசபாஷ் , சரியான பதில்(கவி)மொழி.... வாழ்த்துகள்
பதிலளிநீக்குநன்றி velkannan.
பதிலளிநீக்கு