30 ஏப்ரல் 2009

சில சிந்தனைகள்

எல்லா௫ம்
எல்லாமும்
பெற வேண்டும்.

எனக்கு மட்டும்
சற்று கூடுதலாக.

o

தெய்வத்தால்
ஆகாதெனினும்
முயற்சி

மெய் வ௫த்திக்
கூலி த௫ம்.

o

மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்.

நல்ல மனைவியுமா?

o

மாற்றான் தோட்டத்து
மல்லிகையும் மணக்கும்.

அயல் மகரந்த சேர்க்கையை
பூக்கள்
ஆதரிக்கும் வரை.

o

தெய்வம்
நின்று கொல்லும்.

ஏன்?

o

4 கருத்துகள்:

 1. முதல் கவிதை சூப்பர்!!
  இரண்டாவதில் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை.
  மூன்றாவது வாசித்தபொழுது நன்றாயிருக்கிறது. ஆனால் உள்ளர்த்தம் ஏதாவது இருக்கிறதா?
  நான்காவதும் நன்று!!
  ஐந்தாவது ஏன்?!?!

  பதிலளிநீக்கு
 2. தமிழ்மணம், Tamilsh போன்ற தளங்களில் உங்கள் ப்ளாக்கை இணைத்துக் கொள்ளுங்கள். இன்னும் அதிக பேரை சென்றடையும்.

  அப்புறம் கமெண்டில் சொல் சரிபார்ப்பு(Word verification) இல்லாமல் இருந்தால் நலம்!!!

  பதிலளிநீக்கு
 3. சின்னதாய்.. சூப்பராய் இருக்கிறது

  பதிலளிநீக்கு