20 செப்டம்பர் 2010

இதுவும் கடந்து போகும்
சிற்சில
துரோகங்கள்
சிரிப்போடு
விலகிய ஒரு காதல்
நெருங்கிய நண்பரின்
நடுவயது மரணம்
நாளொரு கதை
சொல்லும் பாட்டியின்
நள்ளிரவு மரணம்
நண்பனொருவனின்
நயவஞ்சகம்
இதுவரைக்கும்
எதுவும் அதுவாய்க்
கடந்து போனதில்லை.

o

(20-09-2010 உயிரோசையில் வெளியானது)

13 கருத்துகள்:

 1. க‌விதை ந‌ல்லா இருக்குங்க‌. வாழ்த்துக‌ளும் கூட‌

  பதிலளிநீக்கு
 2. நன்றி அமைதிச்சாரல் வருகைக்கும் வாழ்த்துக்கும்.

  பதிலளிநீக்கு
 3. எல்லாவற்றையும் அனுபவித்திருக்கிறேன்(அனுபவித்து கொண்டும் இருக்கிறேன்)கவிஞரே ...
  குறிப்பாக //நண்பனொருவனின்
  நயவஞ்சகம்//
  //அதுவாய்க்
  கடந்து போனதில்லை // அட.. ஆமா
  இப்படியாக உங்களின் இருகவிதை தொகுப்பிலும் வியப்பும் சிந்தனையும் ஏற்படுத்திய கவிதைகள் பல
  தொடருங்கள் ... வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 4. கவிதை மிக அருமை...

  வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 5. மிக அண்மையிலிருந்து (துபாய்) ஒரு வாழ்த்து !!!
  நன்றி சுந்தரா.

  பதிலளிநீக்கு
 6. கவிதை மிகவும் எளிமையாகவும்,அதே நேரத்தில் வாழ்வின் விசித்திரத்தையும் ஒரே நேரத்தில் சொல்லிச் செல்கிறது!

  பதிலளிநீக்கு
 7. நன்றி Mohan வருகைக்கும் வாழ்த்துக்கும்.

  பதிலளிநீக்கு
 8. தேய்ந்து போன ஒரு உருவழக்கினை ஆரவாரம் இல்லாமல் பகடி செய்கிற கவிதை.மனித எத்தனமும் குறிப்பாக உள்ளது.சிரிக்கவும் வைத்தது.நன்றி.

  பதிலளிநீக்கு