கவிதை/வடக்குவாசல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை/வடக்குவாசல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

02 பிப்ரவரி 2011

வடக்குவாசலில் ஒரு கவிதை

வடக்குவாசல் ஜனவரி இதழில் வெளியான கவிதை.

இன்னும் கொஞ்சம்

இன்னும் கொஞ்சம்
அன்போடு
இருந்திருக்கலாம்
இவள்.

இன்னும் கொஞ்சம்
இயல்போடு
இருந்திருக்கலாம்
இந்த உறவுகள்.

இன்னும் கொஞ்சம்
இசைவாய்
இருந்திருக்கலாம்
இந்த நண்பர்கள்.

இன்னும் கொஞ்சம்
இலவம்பஞ்சாய்
இருந்திருக்கலாம்
இந்த மனசு.

இதுபோல் இன்னும்
இன்னும் கொஞ்சங்களில்
இந்த வாழ்வு.

o