26 செப்டம்பர் 2010

முகம் நக

அழைத்துப் பேசும் தூரத்தில் இருந்தும்
நண்பனென்று உறுதி கேட்டு
முகப் புத்தகத்தில்
ஈமெயில் அனுப்பியிருந்தான்
நண்பனொருவன்.

அப்படியே அதை அனுப்பி வைத்தேன்
அடுத்தொரு நண்பனுக்கு
அவனும் நானும் சந்திப்பது
அவ்வப்போது என்றபோதும்.

o
நன்றி : திண்ணை.காம்

6 கருத்துகள்:

 1. நல்லா இருக்கு , ஆனா , முதல் பத்திக்கு வருத்தப்படுவதா இரண்டாவது பத்தியில் ஆறுதல் பட்டுகொள்வதா என்று தெரியவில்லை செ.ஜெ... இருப்பினும் தடுக்கமுடியாத தொழில் நுட்ப வளர்ச்சியும் மனிதனுக்குள் இடைவெளியும்.

  பதிலளிநீக்கு
 2. நன்றி வேல்கண்ணன்.
  வாழ்க்கை நிறைய நேரங்களில் இப்படித்தான் இருக்கிறது இல்லையா?

  பதிலளிநீக்கு
 3. நடைமுறை இதுதானே.. இருப்பினும் இதிலும் அளவற்ற பிணைப்பு இருக்கத்தான் செய்கிறது.

  பதிலளிநீக்கு