30 அக்டோபர் 2011

கொடைக்கானல்பூத்துச் சிரிக்கும்
பல வண்ணப் பூக்களுடன்
புகைப்பட புன்னகைகள்.
உச்சியை உரசும் பனிப்பொழிவுடன்
உன்மத்தம் பிடித்த
மேகக் கூட்டங்களின் களியாட்டங்கள்.
தடையின்றி ஓடும்
சைக்கிள்களின் பின்னே
தம் பிள்ளைகளின்
பின்னோடும் அப்பாக்கள்.
தண்ணீர்ப் பூக்களின்
பரஸ்பர பரிமாறல்களுடன்
கூச்சலிடும் குழந்தைகளின்
குதூகலத்தை ரசித்தபடி
தள்ளாத வயது படகோட்டி.
போய் வரலாம்
என்றெண்ணும் உங்களிடம்
பொதுவில் வைக்க
இன்னும் பல உண்டெனினும்
குறிப்பாய் ஒன்று.
திடுமென்று தாவிக்குதித்து
தின்பண்டங்கள் எதையும்
குழந்தைகளிடமிருந்து
பறித்துப் போகும்
மந்திகளைக் கொஞ்சம்
மனதில் வைத்தால்
இடைச்செருகலாய்
இந்த மந்திகளின்றி
நினைவோடையில் தங்கும்
நீங்கள் போய் வரும்
உல்லாசப் பயணம்.

o
(நன்றி: சொல்வனம்)

24 அக்டோபர் 2011

ஆசை முகம்சுழல் வட்ட மேஜை
சுருங்கிய மஞ்சள் ஒளி
சுவைத்த உணவின்
நறுமணச் சுவை.
இவ்வளவு நீண்ட
வருடங்களின்
இடைவெளிக்குப் பின்னும்
சன்னமாக நினைவில்.

சூரிய ஒளியின் இந்த
நிச்சலனப் பொழுதில்
எள்ளளவும்
எதிர்வராமல்
உன் முகம்.

உண்மையில் இருந்ததா
உனக்கு
அசலாய் ஒரு முகம்
அன்றைக்கு?

o

02 அக்டோபர் 2011

இந்த வார விகடனில் கவிதை

இந்த வார ஆனந்த விகடன் (05-10-2011) இதழில் வெளியான கவிதை.
(கவிதையை படிக்க ‘க்ளிக்’ செய்யவும்)