02 பிப்ரவரி 2011

வடக்குவாசலில் ஒரு கவிதை

வடக்குவாசல் ஜனவரி இதழில் வெளியான கவிதை.

இன்னும் கொஞ்சம்

இன்னும் கொஞ்சம்
அன்போடு
இருந்திருக்கலாம்
இவள்.

இன்னும் கொஞ்சம்
இயல்போடு
இருந்திருக்கலாம்
இந்த உறவுகள்.

இன்னும் கொஞ்சம்
இசைவாய்
இருந்திருக்கலாம்
இந்த நண்பர்கள்.

இன்னும் கொஞ்சம்
இலவம்பஞ்சாய்
இருந்திருக்கலாம்
இந்த மனசு.

இதுபோல் இன்னும்
இன்னும் கொஞ்சங்களில்
இந்த வாழ்வு.

o

7 கருத்துகள்:

 1. உண்மைதான்:)!

  அருமையான கவிதை.

  வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 2. //இதுபோல் இன்னும்
  இன்னும் கொஞ்சங்களில்
  இந்த வாழ்வு//

  இன்னும் இன்னுமென்று இன்னும் வாழ்வு ஓடிக்கொண்டிருப்பதை கவிதை அழகா சொல்லிடுச்சு..

  பதிலளிநீக்கு