12 டிசம்பர் 2011

கண்களின் சிரிப்பு

சற்று முன் தட்டுப்பட்டு
கைவசமான
கடவுச்சீட்டு அளவு புகைப்படத்தில்
சிரித்துக் கொண்டிருந்த கண்களின்
முகத்தை என்
அலுவலக வளாகத்தின்
அடுத்தொரு மாடியில்
அவ்வப்போது பார்த்திருக்கிறேன்.

கச்சிதமான சிரிப்புடன் அமைந்த
புகைப்படத்தின்
கடைசி நகலாக அது இருக்கலாம்
இன்னொன்று அதே போல்
இயலுமா என்பது சந்தேகம்தான்.
எதிர்வரும் ஒரு சந்திப்பில்
கொடுக்கும்பொழுது
எப்படி எதிர்கொள்ளும்
இந்த முகம்?

இத்தனையும் யோசித்திருந்தவனை
பார்த்து
இன்னமும் மாறாதிருந்தது
அந்த கண்களின் சிரிப்பு.

o

2 கருத்துகள்:

 1. அந்த கண்களின் சிரிப்பு
  அப்படியொரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது
  அடிநெஞ்சில்.

  பாராட்டுகள்.
  http://niroodai.blogspot.com/

  பதிலளிநீக்கு