புத்தகங்களின் வாசனையோடு, தெரிந்த/தெரியாத முகங்களின் மத்தியில்,
அந்தத் திடலுக்குள் அலைந்து திரியும் பொழுதுகளை, வார்த்தைகளில் வருணிப்பது சிரமம்.
2009 புத்தகக் கண்காட்சிக்கு (அலுவலக நிமித்தமான சென்னை பயணம் காரணமாக)
ஏறத்தாழ எட்டு வருடங்களுக்குப் பிறகு, வந்து போன பொழுதுகள் இன்னமும் என்னுள்.
கடல் கடந்து வாழும் ஒருவன் எதிர்கொள்ள நேரும் பேரிழப்புகளில் ஒன்றென்று இதைச் சொல்வேன்.
அகரம் மற்றும் அகநாழிகை பதிப்பக ஸ்டால்களின் வழியாக, என் கவிதைத் தொகுதிகள் மூன்று, என் இருப்பை (யாராவது ஒருவருக்கு) சொல்லும் வண்ணம், போய்ச் சேருமென்கிற திருப்தி ஒன்றே இப்போதைக்கு.
அனைவருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
சென்னை புத்தகக் கண்காட்சியில் என் கவிதைத் தொகுதிகள் கிடைக்குமிடங்கள்:
அகரம் (அன்னம்)வெளியீடுகள்:
1) அந்தரங்கம் (பக்.112 ரூ.60/-)
2) இன்னபிறவும் (பக்.80 ரூ.60/-)
அன்னம் ஸ்டால் எண் : 88-89 / செல் : 94431 59371 (Kadhir)
அகநாழிகை பதிப்பக வெளியீடு:
3)ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில் (பக்.64 ரூ.50/-)
நிவேதிதா புத்தகப் பூங்கா / Nivethitha Puthaga Poonga - ஸ்டால் எண் : 326 / செல் : 99945-41010
டிஸ்கவரி புக் பேலஸ் / Discovery Book Palace - ஸ்டால் எண் : 334 / செல் : 99404-46650
O
(மீள்பதிவு)
டியர் செல்வராஜ், புத்தகக்காட்சியில் ஸ்டால்களின் எண்களையும் உங்கள் பதிவில் குறிப்பிட்டால் வசதியாக இருக்கும். http://www.bapasi.com/StallList2012.asp
பதிலளிநீக்குநன்றி சரவண கார்த்திகேயன், கூடிய விரைவில் சேர்க்கிறேன்.
பதிலளிநீக்குஉங்களின் தேவதைப் புராணத்திற்கும் என் வாழ்த்துகள்.
வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநன்றி Rathnavel.
பதிலளிநீக்குநன்றி ஐயா. இப்போதுதான் உங்கள் வலைப்பூவை பார்த்தேன்.
பதிலளிநீக்குமுந்தைய பதிலில் உங்களை ஒருமையில் விளித்ததற்கு மன்னியுங்கள்.