28 பிப்ரவரி 2012

அகத்தின் அழகுஇன்னொரு நாளின்
தொடக்கம்.

எல்லோருக்கும் கை அசைத்தபடி
வந்து கொண்டிருந்த மகனின்
மகிழ்ச்சி இழைகளால் ஆன
முகத்தை அணிந்தபடி
சென்று கொண்டிருந்தேன்.

மகனின் கை அசைப்பிற்கு
எதிர்வினை ஏதுமின்றி
எதிர்ப்பட்ட முகமொன்றில்
அத்தனை இறுக்கம்.

உற்றுப் பார்க்கையில்
சற்று முன் இறக்கி வைத்த
என் முகம்.

o

4 கருத்துகள்:

 1. மகனின் கை அசைப்பிற்கு
  எதிர்வினை ஏதுமின்றி
  எதிர்ப்பட்ட முகமொன்றில்
  அத்தனை இறுக்கம்.

  உற்றுப் பார்க்கையில்
  சற்று முன் இறக்கி வைத்த
  என் முகம்.//

  தலைப்பும் அதற்கு அழகிய
  விளக்கமாக அமைந்த கவிதையும்
  மிக மிக அருமை
  மனம் கவர்ந்த பதிவு
  பகிர்வுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 2. நன்றி ரமணி உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்.

  பதிலளிநீக்கு