நகைச்சுவையும் உடல்நலமும்
என்றொரு புத்தகம் வெளியிட்ட
புகைப்படமொன்று இருந்தது
நீள் மேஜையில்.
காதைக் கிழிக்கும் சத்தத்துடன்
ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த
தொலைக்காட்சித் தொடரின்
அன்றைய எபிசோடில்
அடுத்தடுத்த
மாரடைப்பு சம்பவங்கள்.
அவ்வப்போது
திறந்து மூடிக்கொண்டிருந்த
அறைக்கதவு வழியே
கசிந்துகொண்டிருந்தது
அந்த இதய நோய் மருத்துவரின்
ஆர்ப்பாட்டமில்லாத
அமைதியான பேச்சு.
0
விருட்சத்தில் படித்தேன் நண்பரே. அருமை.தற்பொழுது சென்னையில் இருக்கின்றீர்களா? ஊருக்கு சென்று விட்டீர்களா?
பதிலளிநீக்குNandri VM.
பதிலளிநீக்குNow i am in Abudhabi.