31 ஆகஸ்ட் 2009

இணங்குதல்

அடம் பிடித்த மகனைத் தூங்க வைக்க
சொல்லி வைத்தேன்
குட்டி கேரம்போர்ட் ஒன்று
வாங்கித் தருவதாக.
இணங்கினால் ஒன்று கிடைக்குமென்ற
அவன் உலகத்திலும்
இணங்க வைக்கலாம் ஒன்று கொடுத்தால்
என்ற என் உலகத்திலுமாக
அப்படியே உறங்கிப் போனோம்
அடுத்த சில நிமிடங்களில்.o

3 கருத்துகள்:

 1. //அவன் உலகத்திலும்
  இணங்க வைக்கலாம் ஒன்று கொடுத்தால்
  என்ற என் உலகத்திலுமாக
  அப்படியே உறங்கிப் போனோம்


  இரு வேறு உலகங்களை நுட்பமாக இணைத்துள்ளீர்கள்

  பதிலளிநீக்கு