நேசம்
செம்புலப் பெயல் நீர்
ஈரேழு ஜென்மம்
ஈருடல் ஓருயிர்
எவற்றிலும் நீ
எதுவரினும் நீ
எக்கணமும் நீ
இத்தனையும் பேசி
இனித்திருந்த நம் நேசம்
இப்போது இடம்மாறி
என்னவளாய் நீயின்றி
எவரோடோ நீயொன்றி.
◌
எதிர்பார்ப்பு!
அதிக நேரமொன்றும்
ஆகாதுதான்.
ஒருதொலைபேசி
அழைப்பில்கூட
உறுதிசெய்து கொள்ளலாம்.
ஆயினும்,
எதிர்பாரா
ஒரு தருணத்தில்
நீ
எடுத்துத்தரப் போகும்
பிறந்த நாள் பரிசைக்
காண
அமைதியாகவே
வருவேன்.
அநேக
எதிர்பார்ப்புகளோடு.
◌
தடங்கள்
எப்போதும் போல்தான்
இருக்கிறது.
என்னையும் உன்னையும்
பிரித்த நிலா.
இப்போதும் முத்தமிட்டுக்கொண்டுதான்
இருக்கின்றன.
எதிர்வரும் அலைகளோடு
உள் வாங்கும் அலைகள்.
நீ விட்டுப்போன
தடங்களோடு நான்.
இங்கேயும் அங்கேயும்.
இன்றும் நீ வராமலே
இருந்திருக்கலாம்.
ஏனைய நாட்களைப் போல.
◌
மூன்றுமே மிக நல்ல கவிதைகள்!
பதிலளிநீக்குஉங்களின் விகடனில் வந்த கவிதைகளை விடவா?
பதிலளிநீக்குநன்றியும் மகிழ்ச்சியும் ராஜாராம்.
தடங்கள்.. கவிதை ரொம்ப நல்லா இருக்கு செல்வராஜ்
பதிலளிநீக்குநன்றி அபு அஸ்வின்.
பதிலளிநீக்கு