24 மார்ச் 2010

ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில்

ஞாபகங்கள் இல்லாது
போகுமொரு நாளில்

நிறைய தொலைபேசி அழைப்புகள்
நீங்கள் யாரென்னும் கேள்வியோடு
நிராகரிக்கப்படலாம்

நிலுவையில் இருக்கும்
நிறைய வழக்குகள்
தள்ளுபடி செய்யப்படலாம்

நாளைய நம்பிக்கைககளின்
வேர்கள்
நடுக்கம் காணலாம்.

உறவுகளுக்குள்ளான
உறுதிமொழிகள்
உடனுக்குடன்
ஆவணப்படுத்தப்படலாம்.

பிறந்த நாள்
பிரிந்த நாள் உபசாரங்களெல்லாம்
ஒடுங்கியோ அல்லது
ஓய்ந்தோ போகலாம்.

அந்தந்த கணங்களில்
வாழ
அநேகம் பேர்
ஆயத்தமாகலாம்

நிகழ் கணங்களை
உடனுக்குடன்
பதிவு செய்ய வேண்டிய
கட்டாயம்
கவிதைகளுக்கு நேரலாம்

ஞாபகங்கள் இல்லாது
போகுமொரு நாளில்

நிறைய துரோகங்கள்
மன்னிக்கப்படலாம் அல்லது
மறக்கப்படலாம்

(நன்றி: நவீன விருட்சம்)
o

13 கருத்துகள்:

 1. நவீன விருட்சத்தில் வந்தமைக்கு வாழ்த்துகள்
  //நிகழ் கணங்களை
  உடனுக்குடன்
  பதிவு செய்ய வேண்டிய
  கட்டாயம்
  கவிதைகளுக்கு நேரலாம்//
  எனக்கு பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது.
  இதனின் வெளிப்பாடு தானே இந்த கவிதையும்
  நண்பரே ,உங்களின் ஈமெயில் முகவரி ...?

  பதிலளிநீக்கு
 2. உங்களது வலைப்பூவில் நட்புவட்டம் இல்லையா. அல்லது எனக்குத்தான் தெரியவில்லையா..?

  பதிலளிநீக்கு
 3. வருகை தரும் யாவரும் நட்பு உள்ளங்கள் தானே குமார்.
  (உண்மையில் Blog-ல் நட்பு வட்டம் உருவாக்க இனிமேல்தான் கற்றுக் கொள்ள வேண்டும்.)

  பதிலளிநீக்கு
 4. மறந்த நினைவுகளுக்கு ஒரு அழகிய பரிணாமம். வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு