04 மே 2010

மாற்றுவழி

மனந்திருந்த
மாட்டீர்களென்று தெரியும்.
வழிமுறைகளில்
சிறிது மாற்றத்திற்கு
சம்மதமெனில்
வழியாய் ஒன்று
சொல்ல விருப்பம்.

சாம்ராஜ்யங்களையே சாய்த்த
அன்பு காதல் போன்றவற்றை
ஏன் நீங்கள்
ஆகர்சிக்கக்கூடாது உங்கள்
ஆயுதங்களாய்.

o
(நன்றி: வல்லினம் மே இணைய இதழ், மலேசியா)

2 கருத்துகள்: