13 மே 2010

கிடை ஆடுகள்

நிச்சலன முகமோடு
நின்று அசைபோடும்

யாதொரு மந்தையை விட்டும்
எளிதில் பிரிந்து செல்லாத

கட்டி இழுத்து வரும்போதும்
கம்பீரமாய் நடந்துவரும்

ஏனிந்த கழுத்தறுப்பு என்று
எதிர்கேள்வி கேட்காத

கிடை ஆடுகள்

அத்தனை
ருசியானவையும் கூட.

o

9 கருத்துகள்:

 1. ஹைக்கூ க‌விதை ச‌ற்றே நீட்டி சொன்ன‌து போல‌ இருக்கு ந‌ல்லா வ‌ந்திருக்கு செல்வ‌ராஜ் ஜெக‌தீச‌ன் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 2. நன்றி பா.ராஜாராம் & உயிரோடை.

  பதிலளிநீக்கு
 3. இனிமே கறிக்கடைக்கு போகும் போதெலாம் இந்த கவிதை கூட வரும்

  பதிலளிநீக்கு
 4. நல்லஇருக்கு கவிதையும் செந்தில் அவர்களின் பின்னூட்டமும்

  பதிலளிநீக்கு
 5. மிக அருமையான கவிதையொன்று!

  -ப்ரியமுடன்
  சேரல்

  பதிலளிநீக்கு
 6. நன்றி செந்தில், velkannan & சேரல்.

  பதிலளிநீக்கு