24 ஜனவரி 2011
இன்றென் இருப்பென
அங்கு நீர்
வராமல் இருந்திருந்தால்
தச்சன் கவிதைகள்
சர் ரியலிசம்
படிமக் குறியீடுகள்
பற்றியெல்லாம் கதைக்காமல்
இருந்திருந்தால்
அக்குள் இடுக்கில்
அடுக்கியிருந்த
உங்கள் புத்தகமும்
இன்றென் இருப்பென
இருந்திருக்கும்.
o
அதை உங்களிடம்
சொல்லலாமா என்று
தெரியவில்லை.
அதுவரையான
பிம்பமொன்றை
அது எத்தனை தூரம்
கலைத்துப்போடுமென்று
கணிக்கவும் முடியவில்லை.
இத்தனைக்கும் அது
என் பிம்பமும் இல்லை.
இன்னொரு சமயம் கருதி
இன்றும் என்னோடு
எடுத்துப் போகிறேன்.
வேறோர் பொழுதில்
அதை நான் உங்களுக்கு
சொல்லக்கூடும்.
இப்போதைக்கு சுபம்.
பார்ப்போம்.
இன்றே அதை நான்
உங்களிடம்
சொல்லி விடுவதற்கு முன்.
o
பிறந்த நாள் கொண்டாட்டம்
தினமும் ரத்தாகி
திரும்பத் திரும்ப
அமலாக்கப்படுகிறது
மகனின்
அடம் பிடிக்கும் நடவடிக்கைகளை
அவ்வப்போது சரியாக்க.
சரியான பிறந்த நாளன்று
அவன் சமத்தாய்
இருந்து விடும் பொழுதில்
சவால்தான் எங்களுக்கு.
சரியான இன்னொரு
ஆயுதத்தை
சானேற்றும் வரை.
o
(நன்றி: உயிரோசை)
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
1
பதிலளிநீக்கு//இன்றென் இருப்பென
இருந்திருக்கும்.//
இருந்திருந்தால் மிக நன்றாக இருந்திருக்கும்.
2
மறைவாய் ஒரு பிம்பம் தோன்றி மறைகிறது
3
அந்த ஆயுதம் சில வேளைகளில் நம் பக்கம் திரும்புகிறது
நன்றி Vel Kannan.
பதிலளிநீக்குதங்கள் கவிதை "நந்தலாலா இணைய இதழி"ல் வெளிவந்துள்ளது!! வாழ்த்துக்கள்!! தொடர்ந்து எழுதுங்கள்!!
பதிலளிநீக்குவருகை தாருங்கள்...!
பதிலளிநீக்குவாசித்துப் பாருங்கள்...!
பங்கு பெறுங்கள்...!!
என்றும் உங்களுக்காக
"நந்தலாலா இணைய இதழ்"
நன்றியும் மிக்க மகிழ்ச்சியும்.
பதிலளிநீக்குநிச்சயம் வருகிறேன், நேரம் கிடைக்கும் போதெல்லாம்.
பல இணைய தளங்களில் தங்கள் கவிதைகள் வாசித்திருக்கிறேன்... சமீபத்தில் தான், தங்கள் வலைத்தளத்திலேயே இடுகைகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன்... எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது...தொடர்ந்து வாசிக்கிறேன்... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குமிக்க மகிழ்ச்சியும் நன்றியும் Raja.
பதிலளிநீக்கு//சரியான பிறந்த நாளன்று
பதிலளிநீக்குஅவன் சமத்தாய்
இருந்து விடும் பொழுதில்
சவால்தான் எங்களுக்கு.
சரியான இன்னொரு
ஆயுதத்தை
சானேற்றும் வரை//
ரசித்தேன்:)!
நன்றி ராமலக்ஷ்மி.
பதிலளிநீக்கு