ஒரு மலர்
ஒரு மரம்
ஒரு பறவை
இன்னொரு சந்தர்ப்பம்
தரப்படுமெனில்
இப்போதைப் போலவே
இருக்கும்
இன்னொரு வாழ்வும்.
o
இவன் முறை வருவதற்கு
இன்னும் இரண்டு பேர் இருக்கையில்
வரிசையை விட்டு விலகி
நடக்கத் தொடங்கினான்
நின்று கொண்டிருப்பதைவிட
சென்று கொண்டிருக்கலாம்
கல்யாண்ஜியின் கவிதை வரிகளை
அசை போட்டவாறே.
o
(நன்றி: உயிரோசை.காம் & திண்ணை.காம்)
இரண்டும் அருமை.
பதிலளிநீக்குஇரண்டுமே கவர்கின்றன ... அசை போடவும் வைக்கிறது
பதிலளிநீக்குநன்றி ராமலக்ஷ்மி & Vel Kannan.
பதிலளிநீக்குகவிதைகள் நன்று
பதிலளிநீக்குநன்றி உயிரோடை.
பதிலளிநீக்கு