19 நவம்பர் 2011

எதிர் விளையாட்டு



இடைவேளை நேரங்களில்
பள்ளியில் விளையாடும் ஒரு
விளையாட்டின் பெயர்
‘எதிர் விளையாட்டு’
என்றான் மகன்.

‘சிரி என்றால் அழ வேண்டும்
அழு என்றால் சிரிக்க வேண்டும்
உட்கார் என்றால் எழ வேண்டும்
எழுந்திரு என்றால் உட்கார வேண்டும்.’

அனேகமாய் எல்லா நேரங்களிலும்
அவனே ஜெயிப்பதாய் அடிக்குறிப்பு வேறு.
அட்டகாசம் என்று தட்டிக் கொடுத்தவன்
அடியோடு அதை மறந்தே போனேன்.

அடுத்த நாள் வந்த ஸ்கூல் டைரியில்
எழுதப்பட்டிருந்தது.
'பேசாதே என்றால் வகுப்பில்
பேசிக் கொண்டே இருக்கிறான்’
என்று.

o

2 கருத்துகள்:

  1. உங்கள் ப்ளாகில், ப்ளாகை தொடர Follower widget-ஏ காணுமே? இது வரை இல்லா விடில் அவசியம் நிறுவுங்கள் விகடனில் அவ்வப்போது உங்கள் கவிதை பார்க்கிறேன் ஒரு முறை என் ப்ளாகிலும் "பிடித்த கவிதை" என உங்கள் கவிதை மேற்கோள் காட்டினேன். பார்த்தீர்களா என அறியேன்

    பதிலளிநீக்கு
  2. அன்புமிக்க மோகன்குமார்,

    நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.
    Follower விட்கேட் சேர்க்க என்ன செய்ய வேண்டும்?
    ப்ளாக்-இல் தேடித் பார்த்து சலித்து விட்டேன்.
    உங்கள் ப்ளாக்-இல் இப்போதுதான் என் கவிதையை பார்த்தேன்.
    என்ன சொல்ல. மிக்க மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு