21 நவம்பர் 2011

குறுங்கவிதைகள்

பேருந்தின் இரைச்சல் ஓசையில்
பேச்சு வராத தமையனைப் பற்றி
ஓயாமல் பேசிக்கொண்டு
வந்தாள் ஒருத்தி.
எனக்கென்னவோ அவளே
அவனுக்கும் சேர்த்து
பேசிக்கொண்டிருப்பது போல்
இருந்தது.

0

ஒன்றே போல்தான்
உன் குழந்தை
கைகளின் ஸ்பரிசமும்.

O

கண்கள் சொருகும்
அதிகாலைப் பொழுதில்
உதட்டுச் சாயத்தை
ஒத்தி ஒத்தி எடுத்து
உதடுகளால்
சப்பிக் கொண்டிருந்த
ஒருத்தியைக் காண
ஒரு மாதிரி
சந்தோசமாய்தான்
இருந்தது.

O

பின்னிருக்கையில் அமர்ந்தபடி
பயணம் போக நேர்ந்த
வண்டியோட்டியின் ஆச்சர்யம்
வழியெங்கும் காணும்
இத்தனையும்
இத்தனை நாளாய்
இங்கேதான்
இருந்ததா?

O

ஒன்று போலே இருந்த
எட்டாவது முகத்தை
பார்த்தேன் இன்றைக்கு.

O

4 கருத்துகள்:

 1. அருமை அதிலும் கடைசி கவிதை ஏதோ சொல்லவருவதை உணர முடிகிறது.

  பதிலளிநீக்கு
 2. பகிர்வுக்கு நன்றி நண்பரே

  //‘உம்பர்’ என்பது ஒரு புலவருக்குப் புரியக்கூடிய பாஷை. ஆனால் ‘சொர்க்கம்’ என்பது சாதாரணமாகத் தமிழ் தெரிஞ்ச ஒருவனுக்குப் புரியக்கூடியது. புரியக்கூடிய முறையில் எழுதப்படுவதுதான் கவிதை அப்படீங்கறது என்னுடைய நம்பிக்கை.//

  இந்த கருத்தில் எனக்கு முழு உடன்பாடு உண்டு

  பொதுவாக ஒரு நூல் அல்லது கவிதை எந்த அளவுக்கு உயர்ந்த இலக்கியத் தரத்துடன் அமைக்கப்பட்டுள்ளதோ அந்த அளவுக்கு சாதாரண மக்களிடமிருந்து அந்நியப்படும்

  சாதாரண மக்களுக்கு புரியும்படி எழுதுவதே மிகச்சிறப்பு ஏனென்றால் அவர்கள்தான் அவலமான வாழ்க்கைக்கு சொந்தக் காரர்கள்.

  பதிலளிநீக்கு
 3. நன்றி ஹைதர் அலி.
  (நீங்கள் சொல்ல வந்தது சுகுமாரன் நேர்முகத்தைக்
  குறித்து தானே.)
  எப்படியும் நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

  பதிலளிநீக்கு