01
தூக்கி எறியுங்கள்
உங்கள் தம்புராக்களை
தூளியில் உறங்கும்
சிசுவின்
தூக்கம் கலையும் முன்.
o
02
பறத்தல் என்பதைத் தவிர
வேறெந்த முகாந்திரம்
இருக்கப் போகிறது
வெளிர் நீல வானில்
மிதந்தலையும் அந்த
வெண்ணிறப் பறவைக்கு.
o
03
இங்கிருந்து
கொடுக்கப்பட்டவைகளே
எல்லாம் என்றிருக்க
எதைக் குறித்து
சொல்லிக் கொண்டலைகிறோம்
நான் நானென்று.
o
உங்களின் தளத்திற்கு வந்து உள்ளேன். உங்களின் அனைத்து பதிவுகளையும் படித்து விட்டேன். மனித உணர்வுகளையும் நிகழ்வுகளையும்
பதிலளிநீக்குகவிதையாக கோர்த்து உள்ளிர்கள். அருமை. இனி தொடர்வேன்...
(என் தளத்தில் உங்களின் பின்னூட்டம் கண்டுதான் உங்களை அறிந்தேன். அதற்கு முன்னால் படித்ததில்லை. ஆனால் உங்களின் பெயர் கேள்விபட்டது போல் உள்ளது)
நன்றி வேல்கண்ணன் உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும்.
பதிலளிநீக்குமிகவும் ரசித்தேன்
பதிலளிநீக்கு-ப்ரியமுடன்
சேரல்
நன்றி சேரல்.
பதிலளிநீக்குCongrats for your Yugamaayini participation.