14 நவம்பர் 2009

வயிறு

இரவு கண்விழிக்கும்
இளங்காலைப் பொழுதொன்றில்
ஒல்லி தேகத்தின்
ஒட்டிய வயிறோடு
சாலையோரக் கால்வாயை
சுத்தப்படுத்திக்கொண்டிருந்த
சிலரோடு
கார்களைக் கழுவிக்கொண்டிருந்த
ஒருவனையும்
பார்த்தபடி
போய்க்கொண்டிருந்தேன் - அந்த
பூங்காவை சுற்றி
பெருத்த வயிற்றின்
சுற்றளவில் - ஒரு
இன்ச்சாவது குறைத்துவிடும்
உறுதியோடு.

o

5 கருத்துகள்:

 1. அந்த 'ஒருவனை' பற்றியும் சுற்று பெருத்தவர்களையும் பார்த்தபோது எனக்கும் பல கேள்விகள் தோன்றுவது உண்டு.
  ஆனால், உங்களின் கவிதை யதார்த்த நிலையை உறைய வைக்கிறது.
  பிறகு, நவீன விருட்ட்சம் இதழில் உங்களின் கவிதை படித்தேன் அருமை. அதே இதழில் உங்களின் கவிதை தொகுப்பான 'அந்தரங்கம்' பற்றி விமர்சனம் நன்றாக இருந்தது. இன்னும் ஒரு வாரத்தில் நானும் வாங்கி படித்து விடுவேன்
  நன்றி.

  பதிலளிநீக்கு
 2. மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் வேல்கண்ணன்.
  அந்தரங்கம் தொகுதியை என் கவிதைகளுக்காக என்பதைவிட
  அண்ணாச்சியின் அந்த ஒரு விரிவான முன்னுரைக்காக படியுங்கள்.

  பதிலளிநீக்கு
 3. உயிரோசை உங்களது இரண்டு கவிதை படித்தேன். வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு