24 ஜனவரி 2010

இன்னொரு

வண்ணத்துப் பூச்சி
வேடமணிந்து
வாங்கிவந்த பரிசுக்கோப்பையை
ஏந்தியபடி,
முதல் மழலைப் பேச்சில்
'அப்பா' என்றழைத்த
இளையவனிடம்
'அப்பா' இல்லடா 'டாடி'
என்று சொல்லிக்கொண்டிருந்த
மூத்தவனிடம்,
இன்னமும்
சொல்லிக்கொண்டிருக்கிறேன்
பட்டர்பிளை என்பதற்கு
இன்னொரு பெயருண்டு
வண்ணத்துப் பூச்சியென்று.

o

2 கருத்துகள்: