28 ஜனவரி 2010

வாழ்வின் (அ) சுவாரஸ்யங்கள்

முதல் முறையல்ல
இப்படி நிகழ்வது.

அன்பின் நிமித்தமான
ஒரு பரிசளிப்பிற்குப் பின்
அடுத்தொரு சந்திப்பிலேயே
வெகு மூர்க்கமாய்
உன்னைத் தாக்க நேர்ந்த
இந்த பொழுதைப் போல்

இப்படி நிகழ்வது
இது முதல் முறையல்ல.

எதிர்பார்த்தது நடப்பதிலல்ல
எதிர்பாராதது நடப்பதிலன்றோ
இவ்வாழ்வின்
அத்தனை (அ) சுவாரசியங்களும்.



o

6 கருத்துகள்: