புத்தகங்களின் வாசனையோடு, தெரிந்த தெரியாத முகங்களின் மத்தியில்,
அந்தத் திடலுக்குள் அலைந்து திரியும் பொழுதுகளை வார்த்தைகளில் வருணிப்பது சிரமம்.
சென்ற வருட புத்தகக் கண்காட்சிக்கு (அலுவலக நிமித்தமான சென்னை பயணம் காரணமாக)
ஏறத்தாழ எட்டு வருடங்களுக்குப் பிறகு, வந்து போன பொழுதுகள் இன்னமும் என்னுள்,
இந்த வருடமும் ஏதாவது அதுபோல் என்று ஏங்கும் மனதோடு.
கடல் கடந்து வாழும் ஒருவன் எதிர்கொள்ள நேரும் பேரிழப்புகளில் ஒன்றென்று இதைச் சொல்வேன்.
அகரம் மற்றும் அகநாழிகை பதிப்பக ஸ்டால்களின் வழியாக, என் கவிதைத் தொகுதிகள் மூன்று, என் இருப்பை (யாராவது ஒருவருக்கு) சொல்லும் வண்ணம், போய்ச் சேருமென்கிற திருப்தி ஒன்றே இப்போதைக்கு.
அனைவருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ஜனவரி 4 முதல் 17ம் தேதி வரை நடைபெறும் 34-வது சென்னை புத்தகக் கண்காட்சியில்
என் கவிதைத் தொகுதிகள் கிடைக்குமிடங்கள்:
அகரம் (அன்னம்), அரங்கு எண்.93 & 94
1) அந்தரங்கம் (பக்.112 ரூ.60/-)
2) இன்னபிறவும் (பக்.80 ரூ.60/-)
நிவேதிதா புத்தகப் பூங்கா அரங்கில், அகநாழிகை பதிப்பக வெளியீடு அரங்கு எண்.274
1)ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில் (பக்.64 ரூ.50/-)
O
புத்தாண்டு வாழ்த்துக்கள் செல்வராஜ் ஜெகதீசன்.
பதிலளிநீக்குதகவலுக்கு நன்றி.
மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் ராமலக்ஷ்மி.
பதிலளிநீக்கு//கடல் கடந்து வாழும் ஒருவன் எதிர்கொள்ள நேரும் பேரிழப்புகளில் ஒன்றென்று இதைச் சொல்வேன்.//
பதிலளிநீக்குசரியாகச் சொன்னீர்கள்.
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
நன்றி சரவணக்குமார்.
பதிலளிநீக்கு//என் இருப்பை (யாராவது ஒருவருக்கு) சொல்லும் வண்ணம், போய்ச் சேருமென்கிற திருப்தி ஒன்றே இப்போதைக்கு.//
பதிலளிநீக்குநல்ல இருக்கு ... வாழ்த்துகள்
நன்றி Vel Kannan. இனிய புத்தாண்டு வாழ்த்துகளும்.
பதிலளிநீக்குஅண்மையில் திரிசக்தி சுந்தர்ராமன் அவர்களைச் சந்தித்தபோது, My stomach may be in Indonesia; but, my heart is in India என்றார். அதுபோல் நீங்களும் உங்கள் இதயத்தை இந்தியாவில் வைத்துள்ளது தெரிகிறது.
பதிலளிநீக்குவாழ்த்துகள் செல்வராஜ் ஜெகதீசன்.
நன்றி அண்ணாகண்ணன்.
பதிலளிநீக்குபுத்தாண்டும் இந்த இனிய செய்தியும் இனிமைத்தருகிறது... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குநன்றி பாலாசி.
பதிலளிநீக்குபுத்தாண்டு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குபுத்தாண்டு வாழ்த்துக்கள் ..........
பதிலளிநீக்குநன்றி யோகேஷ்.
பதிலளிநீக்கு