08 ஜூன் 2010

பின் தொடரும் நிழல்

குறுவாளொன்று
விலாவில் செருகப்பட்டு
குறுக்குவாட்டில்
குத்திக் கிழிக்கப்பட்டது
உடல்.
வெறுமனே
வெறித்துக் கொண்டிருந்தோம்.

தலை துண்டிக்கப்பட்டு
சற்று தள்ளி
தனியே கிடத்தப்பட்டது.
கைபேசியில் கதை பேசியபடி
கவனித்துக் கொண்டிருந்தோம்.

பெற்றுக்கொண்ட
கறிக் கவரோடு
போய்க் கொண்டிருந்த
கார்ப் பயணத்தில்
வன்கொடுமையொன்றின்
அன்றைய தலைக்கணக்கு
வானொலிச் செய்திகளில்
பின் தொடரும் நிழலாய்.

o
(நன்றி: கீற்று.காம்)

8 கருத்துகள்:

  1. தனக்கு நேராதவரை எல்லாமே நமக்கு செய்திகள்தான் ..
    முகத்தில் அறையும் கவிதை

    பதிலளிநீக்கு
  2. மொத்ததில நாமதான் மக்கள், நாமதான் நிழல்.. வருந்தித் தொலைக்க.. இன்றும், என்றும் யாரையோ எதிர்நோக்கியே கடக்கின்றோம் நம்மை..

    மிக நல்ல கவிதை..

    பதிலளிநீக்கு