24 ஜூன் 2010

நிராகரிப்பு

நிராகரிப்பின் காரணங்கள்
நேரிடையாக சொல்லப்படுவதில்லை
அல்லது
சொல்லப்படாமலே புரிந்து கொள்ளப்படுகின்றன.

நிராகரிப்பை
நேர்கொள்ளும் தருணங்களில்

அமல்படுத்தப்படும் நிராகரிப்பை
அப்படியே ஏற்றுக்கொள்ளலாம்

(ஏற்றுக்கொள்ளப்படும் நிராகரிப்பில்
உண்டாகக்கூடிய இசை கேடுகள்
அத்தனையும்
உடனடியாக நீர்த்துப் போகின்றன)

நிராகரிப்பிற்கான
காரணங்களாய்
நிறைய பட்டியலிட்டு
ஆராய முற்படலாம்

நிம்மதியாய் ஒரு தேநீர்
அருந்தியபடி
நிதானமாக தீர்மானிக்கலாம்
நிஜமாகவே அதுவொரு
நிராகரிப்புதானா
என்றும்.

o

7 கருத்துகள்:

 1. ரொம்ப‌ ந‌ல்லா இருக்குங்க‌ செல்வ‌ராஜ் ஜெக‌தீச‌ன். அழ‌மான‌ உண‌ர்வின்/வ‌லியின் மெல்லிய‌ வெளிப்பாடு

  பதிலளிநீக்கு
 2. மென்மையாக ஆரம்பித்து மென்மையாக முடிகிறது பல கேள்விகளுடன் .... அருமை செ.ஜெ...

  பதிலளிநீக்கு
 3. //நிம்மதியாய் ஒரு தேநீர்
  அருந்தியபடி
  நிதானமாக தீர்மானிக்கலாம்
  நிஜமாகவே அதுவொரு
  நிராகரிப்புதானா
  என்றும்//.

  ரொம்ப நல்லாருக்கு.

  பதிலளிநீக்கு