21 ஜூன் 2010

வாழ்வின் நிலைகளில்

பெருமழைக்
காலமொன்றிலோ
கடுங்கோடையொன்றின்
வெம்மையிலோ
வாடைப்
பருவத்திலோ
வசந்தத்தின்
வாசலொன்றிலோ

அடர் வனாந்திரத்தின்
ஆளரவமற்ற பொழுதுகளிலும்
உயிர் துள்ளும்
உன்னத நேரங்களிலுமென

வாழ்வின்
வெவ்வேறு நிலைகளில்
உங்கள்
வெண்கலக் குரல்
கொடுக்கும் இதம்
உன்னதமானது.

இயல்பான நடிப்புக்கு
இலக்கணமாய்
பேட்டியொன்றில்
நீங்கள் மொழிந்த
நடிகனின் முகம்
வெண்கலப் பானையில்
உருளும் கல்லொன்றாய்
இடையிடையே நெருடும்
இந்தப் பொழுதிலும்.

o
(பாடகர் பி பி ஸ்ரீனிவாஸ் அவர்களுக்கு - இயல்பான நடிப்பு நடிகர் ஜெமினியுடையதே என்ற அவரின் பேட்டிக்காக)

6 கருத்துகள்: