08 ஜூலை 2010

இரண்டு கவிதைகள்

01

தொடர்பிலிருந்து நீ
விலகிச் செல்லும்
ஒவ்வொரு முறையும்
பிறிதொரு மார்க்கத்தில்
உன்னை
பின்தொடர யத்தனிக்கும்
வேளையில்
நீயாகவே அழைத்துப் பேசி
தொடரச் செய்கிறாய்
இந்த விளையாட்டை
இன்னுமோர் முறையும்.

O

02

புதிதாய் வந்து
நின்றிருந்த காரின்
முன்புறம் நெடுநேரம்
விளையாடிக்கொண்டிருந்த
இரண்டரை வயது
மகனின் கையிலிருந்த
கல்லொன்றைக் காண
நேர்ந்த பொழுதுக்குள்
வரைந்து தள்ளியிருந்தான்
நிறைய கோட்டோவியங்களை.
சுற்றியிருந்தோரிடமிருந்து
ஏதும் சுடுசொல்
வருவதற்குள் பட்டென்று
சொல்லி ஓடிப்போனான்
'பெரிய ரப்பர் கொண்டு
அழித்தால்
போய்விடும் அப்பாவென்று'

o

12 கருத்துகள்:

  1. இரண்டுமே அருமை. முதல் விளையாட்டை தவிர்க்க முடியாது , பின் விளையாட்டை தடுக்க முடியாது இல்லையா... ?

    பதிலளிநீக்கு
  2. நன்றி ஆறுமுகம் முருகேசன்.

    பதிலளிநீக்கு
  3. ரெண்டுமே சீரியசான விளையாட்டாவுல இருக்கு செ.ஜெ! :-)

    superb!

    பதிலளிநீக்கு
  4. முதல் விளையாட்டும்.. இரண்டாம் குறும்பும் மிகவும் ரசித்தேன் ..

    பதிலளிநீக்கு
  5. நன்றி கலாநேசன் & கே.ஆர்.பி.செந்தில்.

    பதிலளிநீக்கு