27 ஜூலை 2010

இறுதி வரை

தலைவாரி
பூச்சூடி
கண்ணெழுதி
புருவமெழுதி
உதடெழுதி
காதிற்கு அழகு
வளையமிட்டு
பிடித்த வண்ணப்
புடவையணிந்து
நெற்றிக்கு
நீல வண்ணப்
பொட்டிடுகையில்
பட்டென்று
விழித்தெழுந்தவளை
இமைக்காமல் பார்த்துக்
கொண்டிருந்தான்
எதிரே மாலையோடு
சுவர்ப்படத்தில்
இறுதி வரை கூட
வருவேனென்றவன்.

o

11 கருத்துகள்:

  1. கவிதையில் ஆரம்பம் காதலோடு ஆரம்பித்து முடிவில் மனதைக் கனக்க வைத்துவிட்டது. அருமையான கவிதை.

    பதிலளிநீக்கு
  2. அவள் கனவுகள் வாழவேண்டும் என்ற அவளின் துடிப்பைக் காட்டுகிறது.ஒருவன் வருவான்.அவளுக்குவாழ்வு தருவான்.அந்த நம்பிக்கை உள்ளது....காஸ்யபன்

    பதிலளிநீக்கு
  3. நன்றி ஆறுமுகம் முருகேசன் & முத்துவேல்.

    பதிலளிநீக்கு
  4. நன்றி kashyapan உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்.

    பதிலளிநீக்கு