வந்து விழுந்த கேள்விகளுக்கு
விடையளித்தபடி
வண்டியோட்டிக் கொண்டிருந்தேன்
…இத்தனை தூரம் போய்வர
இவ்வளவு பெட்ரோல் போதுமா?
ஏன் இந்த அவசரம்
இந்த நடு இரவிலும்?...
இன்னும் பலவற்றிற்கு சரளமாய்
பதில் சொல்லி வந்தவன்
சட்டென்று சுதாரித்து
பக்கத்தில் பார்த்தேன்
இரு கைகளையும் நீட்டி
தானும் வண்டியோட்டும்
பாவனையுடன் பக்கத்து
இருக்கையிலிருந்த மகனை.
O
அருமை:)!
பதிலளிநீக்குநன்றி ராமலக்ஷ்மி.
பதிலளிநீக்கு//சட்டென்று சுதாரித்து// கவிதை படித்த முடித்தவுடன் எனக்கும்.
பதிலளிநீக்குநன்றி Vel Kannan.
பதிலளிநீக்குஹா ஹா .. வண்டியோட்ட ஆரம்பிச்சிட்டாரா ஜூனியர்.. குட் :-)
பதிலளிநீக்குநன்றி உழவன்.
பதிலளிநீக்குகவிதை நல்லா இருக்குங்க செல்வராஜ் ஜெகதீசன்
பதிலளிநீக்குநன்றி உயிரோடை.
பதிலளிநீக்குகற்றலின் முதல் படி ....
பதிலளிநீக்குநன்றி Saravanan.
பதிலளிநீக்கு