23 அக்டோபர் 2010

திண்ணையில் நூறாவது பதிவு

(19-06-2008 தேதியிட்ட திண்ணையில் என் முதல் பதிவு (கவிதைகள்) வெளியானது,
இந்த கவிதைப்பதிவு திண்ணையில் வெளியாகும் எனது நூறாவது பதிவு,
திண்ணை ஆசிரியர் குழுவுக்கு என் மனமார்ந்த நன்றி)


01
பரிவு

எளிதில்
அணுக முடியாத
ஒருவருடன்
அலுவல் பேச்சு
அத்தனைப் பரிவோடு
அமைந்ததன் காரணம்
என் குழந்தைகள் குறித்த
விசாரிப்புகளோடு
பிள்ளையென்று
ஏதுமற்ற அவரின்
பத்தாண்டு தாம்பத்தியமும்.

O

02
ஓர் நாளில்

காலை நடைப்பயிற்சியில்
அப்பாவையும்
பின் நிகழ்ந்த
பேருந்துப் பயணத்தில்
மகளையும் கண்ட நாளொன்றில்
அவர்களைப் பிரிந்து வாழும்
அம்மாவையும் பார்க்க நேர்ந்தது
ஆலயமொன்றில்.

O

8 கருத்துகள்:

  1. இரண்டாவது கனம்மா இருக்குது. திண்ணையில மட்டுமே நூறா? கலக்குங்க.

    பதிலளிநீக்கு
  2. சதத்துக்கு வாழ்த்துக்கள்! தொடருங்கள்!

    இப்பதிவினைக் கண்டதும் திண்ணையில் என் முதல் படைப்பு எப்போது எனப் பார்க்கத் தோன்றியது:)! ஜூலை 2003!

    பதிலளிநீக்கு
  3. நன்றி ராமலக்ஷ்மி.
    ஜூலை 2003!
    அப்படீன்னா நீங்களும் சதமெல்லாம் தாண்டியிருக்கனுமே.

    பதிலளிநீக்கு
  4. இல்லையில்லை. அரை சதத்துக்கு வேண்டும் இன்னும் ஒன்பது:)!

    பதிலளிநீக்கு
  5. தொடுங்கள் விரைவில்.
    (நிறைய எழுதுகிறோம் என்பதை விட, நிறைவாய் எவ்வளவு எழுதுகிறோம் என்பது தானே முக்கியம் ராமலஷ்மி.)

    பதிலளிநீக்கு
  6. //நிறைய எழுதுகிறோம் என்பதை விட, நிறைவாய் எவ்வளவு எழுதுகிறோம் என்பது தானே முக்கியம் //
    அந்த நிறைவை செய்து அடைந்திருப்பதாகவே நம்புகிறேன். நூறுக்கும் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு