01 மார்ச் 2011

இரண்டு கவிதைகள் - நவீன விருட்சம்

01
கோலாகலம்

சுற்றிவிடப்பட்ட தட்டு
சுழன்று கொண்டிருந்தது
ஒவ்வொரு முறையும்
ஓரோர் மாதிரி.

குழந்தைக் கண்களின்
கோலாகலமோ
ஒவ்வொரு முறைக்கும்
ஒரே மாதிரி.

O
02
கண்ணாமூச்சி

அதற்குள்ளாகவா என்று
அகல விரியும் விழிகளுக்கு
இதற்குள்தான் என்று
இதழ் விரியுமுன்னே
எதற்குள் என்றபடி
எட்டிப் போடும் கால்களுடன்

இப்படித்தானே இருந்து கொண்டிருக்கிறோம்

இரவைத் தொடும் கனவுடன்
இளித்துக் கொண்டிருக்கும் பகல் மாதிரி.

o

(நன்றி : நவீன விருட்சம்)

6 கருத்துகள்:

  1. நன்றி சௌந்தர் வருகைக்கும் வாழ்த்துக்கும்.

    பதிலளிநீக்கு
  2. இரண்டுமே நல்லாருக்கு, கவித்துமாகவும்,உணர்வுபூர்வமாகவும்

    பதிலளிநீக்கு
  3. ரசிக்க வைக்கின்றன தங்கள் கவிதைகள்! லயிக்கக் காத்துக்கிடக்கின்றன எங்கள் இதயங்கள்!

    பதிலளிநீக்கு