01
கோலாகலம்
சுற்றிவிடப்பட்ட தட்டு
சுழன்று கொண்டிருந்தது
ஒவ்வொரு முறையும்
ஓரோர் மாதிரி.
குழந்தைக் கண்களின்
கோலாகலமோ
ஒவ்வொரு முறைக்கும்
ஒரே மாதிரி.
O
02
கண்ணாமூச்சி
அதற்குள்ளாகவா என்று
அகல விரியும் விழிகளுக்கு
இதற்குள்தான் என்று
இதழ் விரியுமுன்னே
எதற்குள் என்றபடி
எட்டிப் போடும் கால்களுடன்
இப்படித்தானே இருந்து கொண்டிருக்கிறோம்
இரவைத் தொடும் கனவுடன்
இளித்துக் கொண்டிருக்கும் பகல் மாதிரி.
o
(நன்றி : நவீன விருட்சம்)
நல்ல கவிதை வாழ்த்துக்கள்..
பதிலளிநீக்குநன்றி சௌந்தர் வருகைக்கும் வாழ்த்துக்கும்.
பதிலளிநீக்குஇரண்டுமே நல்லாருக்கு, கவித்துமாகவும்,உணர்வுபூர்வமாகவும்
பதிலளிநீக்குநன்றி முத்துவேல்.
பதிலளிநீக்குரசிக்க வைக்கின்றன தங்கள் கவிதைகள்! லயிக்கக் காத்துக்கிடக்கின்றன எங்கள் இதயங்கள்!
பதிலளிநீக்குநன்றி நந்தலாலா.
பதிலளிநீக்கு