06 டிசம்பர் 2010

இன்னுமொரு முறைஇந்தக் கவிதை வரிகள்
உங்களுக்கானதாய் இல்லாமல் இருக்கலாம்.

அடுத்த வாரத்திலேயே
அதன் கோரப் பிடிகளுக்குள்
அகப்பட்டுக் கொண்டாலும்
அந்த ஏழு நாட்களில்
அங்கங்கு எதிர்ப்பட்ட
அத்தனை விதமான வாசனைகளையும்
அதன்பொருட்டு கொண்ட
கைவிரல்களின் ஆட்டத்தையும்
வெற்றி கொண்ட பொழுதுகள்
வெறும் வெற்றுச் சாதனை என்று
சொல்பவர் நீங்களென்றால்

இந்தக் கவிதையின் முதல் இரண்டு வரிகளை
இன்னுமொரு முறை படியுங்கள்.

o

6 கருத்துகள்:

 1. வெற்றி கொண்ட பொழுதுகள் மற்றுமொரு நோக்கத்திற்கான விதைப்பை ஊன்றும் வகையில் வெற்றுச் சாதனைகளாவதில்லை என்னுமளவில் எல்லோருக்குமான வரிகளை அடக்கியுள்ளது இக்கவிதை. நலமா நண்பரே...

  பதிலளிநீக்கு
 2. நலம் நிலாமகள். நன்றி உங்கள் வாழ்த்துக்கும்.

  பதிலளிநீக்கு
 3. வித்தியாசமான வடிவமைப்பு கொண்டிருக்கிறது.. இக்கவிதை! தொடரட்டும் புதுமுயற்சிகள்!! வாழ்த்துக்கள்!!


  "நந்தலாலா" இணைய இதழ்,
  www.nanthalaalaa.blogspot.com

  பதிலளிநீக்கு
 4. கடைசி வரியில் கவிதை சொடக்கு போடுகிறது. உங்களின் தளத்திலிருந்து சற்று மாறியிருப்பது போல் இருக்கிறது.
  அருமையான் வடிவமைப்பு கவிஞரே வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு